தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார். இதேபோன்று, மருத்துவ காப்பீடு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார். இந்நிலையில் அ.தி.மு.க.வினர், கோரிய கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்காததால் அவையில் இருந்து […]
3 துறைகளின் கோப்புகளை ஓபன் செய்ய வச்சிராதீங்க; திமுகவுக்கு முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில் அளித்தார். இதற்கிடையில் திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா? என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். அப்போது சட்டென்று எழுந்து முதல்-அமைச்சர் […]
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார்; சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் கடந்த 12-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசினார். அப்போது அவர், நான் 280 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இங்கு வருகிறேன். அதற்கு பயணப்படி கொடுக்கிறீர்கள்… ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. வாடகைக்குதான் எடுக்க வேண்டியதுள்ளது .. எனது தொகுதியில் 40 கிலோமீட்டர் சுற்றளவு பயணித்து மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்வதற்கான வாகன வசதிகள் இல்லை…. ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு, அவருக்கு ஊதியம் கொடுக்கும் அளவுக்கு […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் “நூலக விழா” கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லுதல், நினைவாற்றல் சோதித்தல் போட்டி, புத்தக பக்க அடையாளக் குறியீடு உருவாக்குதல், சைகை விளையாட்டு, புத்தக விமர்சனம், புத்தக அட்டை வடிவமைத்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் முடிவடைந்து இன்று 18ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற்றது. நூலக ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை உதவி பேராசிரியருமான ரா.கவிதாமஞ்சு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அ.பாண்டியராணி விழாவிற்கு தலைமை […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாளமுத்துநகரைச் சேர்ந்த சரவணக்குமார் என்ற இளைஞர் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கியதற்காக, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் மாநில இளைஞர் விருதுக்கான பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ. 1, லட்சத்துக்கான காசோலையைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை சந்தித்துத் தனது விருதினைக் காண்பித்து நேரில் வாழ்த்து பெற்றார். இவ்விருதானது போதைப்பொருள் விழிப்புணர்வு, செயல்முறை கற்றல் திட்டம், பொது […]
இந்திய அஞ்சல் துறையின் சார்பில் அனைத்து வயதினருக்குமான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி (2026) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி 1.8.2026 தொடங்கியது. 31.10.2026 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். தலைப்பு: “அன்னை பூமிக்கு ஒரு கடிதம் – இயற்கையைப் பாதுகாக்கும் என் உறுதிமொழி” (A Letter to Mother Earth: My Promise to Protect Nature). மொழிகள்: தமிழ், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் […]
சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத்தை விட தமிழகம் முன்னேறுகிறது; கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் நாஞ்சில்
கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளராக த. வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு கலந்து கொண்டனர். கூட்டத்தில் த. வெ. க. பரப்பரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:- எங்கள் கட்சியின் […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை விரிவாக்கம் மற்றும் செப்பனிடுதல் சம்பந்தமாக கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, சிபிஎம், சிஐடியு, டி ஒய் எப் ஐ , மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள், நலச்சங்கம்சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் தமிழ்நாடு முதல்வருக்கு 1000 தபால் அனுப்பும் போராட்டம் கடையடைப்பு மற்றும் வீடுகளில், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்ட பின்னணியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் தலைமையில் 31-7-2026 அன்று சமாதான கூட்டம் நடத்தப்பட்டு முதல் கட்டமாக 10 நாட்களுக்குள் “பேட்ச் […]
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி அமைச்சர் ஸ்ரீநாத்திடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள தீப்பெட்டி தொழிலுக்கு பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன, பிளாஸ்டிக் லைட்டர்கள் பயன்பாட்டினால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,. தீப்பெட்டி வியாபாரம் ஆண்டுக்கு 23 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதாவது ரூ.600 கோடி தீப்பெட்டி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழந்துள்ளனர், இதன் காரணமாக தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தூத்துக்குடி மற்றும் வ.உ.சி கலைக்கல்லூரி இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாம் 29.8.2026 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தூத்துக்குடி : வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது, தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வேலை அளிப்பவர்கள் பங்கேற்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணிநாடுநர்களை நேரடியாக தேர்வு செய்துகொள்ள […]







