கோவில்பட்டி மந்திதோப்பு சாலை விரிவாக்கம் கோரி மறியல் போராட்டம்

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை விரிவாக்கம் மற்றும் செப்பனிடுதல் சம்பந்தமாக கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, சிபிஎம், சிஐடியு, டி ஒய் எப் ஐ , மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள், நலச்சங்கம்சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் தமிழ்நாடு முதல்வருக்கு 1000 தபால் அனுப்பும் போராட்டம் கடையடைப்பு மற்றும் வீடுகளில், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்ட பின்னணியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் தலைமையில் 31-7-2026 அன்று சமாதான கூட்டம் நடத்தப்பட்டு முதல் கட்டமாக 10 நாட்களுக்குள் “பேட்ச் ஒர்க்” செய்வது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்டபடி எந்த பணியும் நடக்கவில்லை எனவே நகராட்சி நிர்வாகத்தைக் இன்று செவ்வாய் காலை 10 மணிக்கு கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவில் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். என்று அறிவிக்கப்பட்டு இருந்தது,
அதன்படி கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திட வலியுறுத்தி மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் நலச்சங்கம், குடியிருப்போர் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, DYFI, CITU மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எட்டயபுரம் சாலையில் வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன, காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் அத்துமீறி நுழைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி வழக்கறிஞர் ரவிக்குமார் ஆகிய இருவரையும் தர தரவென இழுத்து சென்று கைது செய்ததை

இதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மற்றவர்களையும் கைது செய்தனர்.
மறியல் போராட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ரவிக்குமார், கல்லூரணி ராதாகிருஷ்ணன், செண்பகராஜ், காளிதாஸ், லட்சுமணன், BSNL துரைராஜ், சுபேதார் கருப்பசாமி, நல்லையா, மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெய்வேந்திரன், முருகன், முத்துராஜன், மணி, ராம சுப்பு, கிருஷ்ணவேணி, மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் போத்திராஜ், சங்கரகுமார், நேரு, வெள்ளைத்துரை, சூரியா கருப்பசாமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.







