முதலமைச்சர் விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி அமைச்சர் ஸ்ரீநாத்திடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள தீப்பெட்டி தொழிலுக்கு பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன,
பிளாஸ்டிக் லைட்டர்கள் பயன்பாட்டினால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,. தீப்பெட்டி வியாபாரம் ஆண்டுக்கு 23 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.

அதாவது ரூ.600 கோடி தீப்பெட்டி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்,
இதன் காரணமாக தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்,.
இந்த நிலையில் பிளாஸ்டிக் லைட்டர் களுக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து முறையிட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
. இதனிடையே, கோவில்பட்டி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமையில் தீப்பட்டி உற்பத்தியாளர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் ஸ்ரீநாத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்,
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஸ்ரீநாத், தங்களது கோரிக்கை தொடர்பாக முதல் – அமைச்சரிடம் எடுத்துக் கூறி, முதல்- அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகஉறுதியளித்தார்.

மேலும், முதல்- அமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு. தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் மதன் ராஜாவிடமும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர்.
, நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கோபால்சாமி, பொரு ளாளர் ஜோசப் ரத்தினம்., குளோபல் மேட்சஸ் அசோசியேசன் தலைவர் ரத்தினகுமார். துணை செயலாளர் ராகேஷ். மகேந்திரன். தேன்மொழி ராஜன். தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க பொருளாளர் ராஜவேல், பேராசிரியர் கணேஷ்ராம் ஆகியோர் உடனிருந்தனர்.







