தூத்துக்குடியில் 29-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ; நிறுவனங்கள் பதிவு செய்ய அழைப்பு
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தூத்துக்குடி மற்றும் வ.உ.சி கலைக்கல்லூரி இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இந்த முகாம் 29.8.2026 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தூத்துக்குடி : வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது,

தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வேலை அளிப்பவர்கள் பங்கேற்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணிநாடுநர்களை நேரடியாக தேர்வு செய்துகொள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுங்கள். என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்அழைப்பு விடுத்துள்ளது,
முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் / Employers பங்கேற்புக்கு பதிவு செய்ய: https://forms.gle/Tzy93e719kqcLYQk6
தொடர்புக்கு: 9384499848 என்ற செல்போன் நம்பரை அழைக்கலாம் என்று செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








