கோவில்பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ70 ஆயிரம் செலவில் வாயிற்கதவு அமைப்பு
Oplus_16908288

கோவில்பட்டி பங்களாதெரு nakaraaßதொடக்கப் பள்ளியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ70ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வாயிற்கதவு திறப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி நகராட்சி பள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளியின் முகப்பில் ரூ 70 ஆயிரம் மதிப்பில் வாயிற்கதவு (இரும்பு கதவு)அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு முன்னிலை வகித்தார்.
ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட கிளப் சர்வீஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாயிற்கதவினை திறந்து வைத்தார்

ரோட்டரி சங்க நிர்வாகிகள், சீனிவாசன்,ராஜ்குமார், தாமோதர கண்ணன்,மாரியப்பன்,நடராஜன்,சரவணன், மணிகன்டன் உள்பட மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்த கொuண்டனர்.முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ராஜசரஸ்வதி நன்றி கூறினார்







