கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Oplus_16908288

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள்( எஸ். எஸ். டி. எம்.) கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மற்றும் ஆங்கிலத் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.

வணிக நிர்வாகவியல்த துறை தலைவர் மற்றும் பழைய மாணவர் சங்கத் தலைவர் ரமேஷ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் கல்லூரி செயலாளர் பார்த்திபன், கல்லூரி நிர்வாக் குழு உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள் கதம்பராஜன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். கல்லூரியின் வளர்ச்சிக்கும், எதிர்கால செயல்பாடுகளுக்கும் முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.
ஆங்கிலத் துறைத் தலைவரும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான கற்குவேல் ராஜ் நன்றி கூறினார்.

இந்த சந்திப்பில் ஆங்கிலத் துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறையை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, கல்லூரியுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியினை செய்து இருந்தனர்.







