நூலக விழா: கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் “நூலக விழா” கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லுதல், நினைவாற்றல் சோதித்தல் போட்டி, புத்தக பக்க அடையாளக் குறியீடு உருவாக்குதல், சைகை விளையாட்டு, புத்தக விமர்சனம், புத்தக அட்டை வடிவமைத்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகள் முடிவடைந்து இன்று 18ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற்றது. நூலக ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை உதவி பேராசிரியருமான ரா.கவிதாமஞ்சு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அ.பாண்டியராணி விழாவிற்கு தலைமை தாங்கினார்.நூலக வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி நூலகம் மற்றும் புத்தக வாசிப்பு குறித்து அவர் உரையாற்றினார்.
சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஸ்குமார் நூலகத்தின் நன்மைகள் குறித்து விளக்கினார்.
சாத்தூர் தனுஷ்கோடி பல்நோக்கு சிறப்பு மருத்துவமணையின் மருத்துவர் த.அறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், நூலகத்தின் செயல்பாடுகள் மற்றும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

நூலகப் பொறுப்பாளர் சு.பாலா , போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களின் விவரங்களை அறிவித்தார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் நூலகர் ச.காந்திமதி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆலோசனைக்குழு நூலக ஒருங்கிணைப்பாளர் ரா.கவிதாமஞ்சு நூலக பொறுப்பாளர் சு.பாலா, நூலகர் ச.காந்திமதி, நூலக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் வாசகர் வட்ட மாணவ, மாணவியர்கள் செய்திருந்தார்கள்.







