அஞ்சல் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி
இந்திய அஞ்சல் துறையின் சார்பில் அனைத்து வயதினருக்குமான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி (2026) அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டி 1.8.2026 தொடங்கியது. 31.10.2026 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

தலைப்பு: “அன்னை பூமிக்கு ஒரு கடிதம் – இயற்கையைப் பாதுகாக்கும் என் உறுதிமொழி” (A Letter to Mother Earth: My Promise to Protect Nature).
மொழிகள்: தமிழ், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் கடிதம் எழுதப்பட வேண்டும்.
போட்டி விதிமுறைகள்:
பிரிவுகள் & வார்த்தை எல்லை:
உள்நாட்டு கடித அட்டை (Inland Letter Card): 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கடித உறை (Envelope): 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எழுதும் முறை: கடிதம் போட்டியாளரின் சொந்தக் கையெழுத்தில் (Handwritten) எழுதப்பட்டிருக்க வேண்டும்.
வயது விபரம்:01.1.2026 அன்று 18 வயது நிறைவு பெற்றவர் / 18 வயது நிறைவு பெறாதவர் என்ற விவரம் கடிதத்தில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.

முகவரி: போட்டியாளரின் பெயர் மற்றும் முழு முகவரி கடிதத்தில் தவறாமல் இடம்பெற வேண்டும்.
கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
முதன்மை அஞ்சல் துறைத் தலைவர்,
தமிழ்நாடு வட்டம்,
சென்னை – 600002.
மாநில அளவில் வழங்கப்படும் பரிசுகள்:
முதல் பரிசு: ரூ. 25,000/-
இரண்டாம் பரிசு: ரூ. 10,000/-
மூன்றாம் பரிசு: ரூ. 5,000/-
தேசிய அளவில் வழங்கப்படும் பரிசுகள்:
முதல் பரிசு: ரூ. 50,000/-
இரண்டாம் பரிசு: ரூ. 25,000/-
மூன்றாம் பரிசு: ரூ. 10,000/-
இப்போட்டியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்று சிறந்த பரிசுகளை வெல்லுமாறு தூத்துக்குடி கோட்ட முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.







