தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர், காவிரி டெல்டாவில் […]
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தை சேர்ந்த ரமேஷ் (50) என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்தில் பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எட்டயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கழுகாசலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த ரமேஷ், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குப் பிறகு லாரி […]
மாற்று கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முதன்மை செய்திதொடர்பாளர் பொறுப்பு: விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி, கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகள் & பொறுப்பாளர்கள்: இணைப் பொதுச்செயலாளர்: சி.டி.ஆர். நிர்மல்குமார் (தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்) துணைப் பொதுச்செயலாளர்: ஆ.ராஜ்மோகன் (தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர் மற்றும் அணி பொறுப்பாளர்) ஒருங்கிணைப்பாளர்கள்: எஸ். ரமேஷ், கேத்தரின் பாண்டியன், க.சி.தி.அனந்தஜித் மகியா. புதிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: முதன்மைச் […]
சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை 142-வது வட்டத்திற்குட்பட்ட மறைமலை அடிகள் பாலத்தின் கீழ், அடையாறு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள திடீர் நகர் பகுதியில், அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடு மற்றும் கழிப்பறை வசதி இல்லாதது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் , ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஆனந்த் உடனடியாக அப்பகுதிக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடிப்பட்டச் சாகுபடியை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.20க்கு 6 வகை காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காய்கறி விதைத் தொகுப்புகளை விநியோகித்து ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது: தோட்டக்கலைத் துறை சார்பில் 2026-ஆம் ஆண்டு ஆடிப்பட்டச் சாகுபடியை முன்னிட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் […]
கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கண்டேயன், தனக்கு ஜாமீன் வழங்கக் […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனைப்படி நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். உதவிப் பேராசிரியர் மகாராஜன் முன்னிலை வகித்தார். அனைத்துத் துறை தலைவர்களும் இந்நிகழ்ச் சியில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கூட்டத்தில் அரசு உயர் பதவியில் உள்ள முன்னாள் மாணவர்கள், வெளிநாட்டில் பணி புரியும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்களாக இருக்ககூடிய முன்னாள் மாணவர்கள் 100 […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் சம்மந்தமாக கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் அவைதலைவர் கொம்பையாபாண்டியன் நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பத்மபூஷன் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. மேலும் காமன் வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ராஜாமுத்துப்பாண்டி க்கு மாவட்ட தேமுதிக சார்பாக […]
தொகுதி மறுவரையறை தமிழ்நாடு மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்துவிடும்; ராகுல்காந்தி பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொகுதி மறுவரையறை தமிழகத்தை […]
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அ மீதானளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் புகாரிலும் பெயர் இல்லை. எப்.ஐ.ஆரிலும் பெயர் இல்லாத நிலையிலும் என் பெயர் சேர்க்கப்பட்டு அதற்காக முன் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் தொடர்ந்து காலையும் மாலையும் கையெழுத்திட்டு வருகிறேன். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக ஒருவழக்கு பதிவு செய்து, நான் தங்கியிருந்த அறைகளிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை செய்து வழக்கை பதிவு […]







