லாரி மோதி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தை சேர்ந்த ரமேஷ் (50) என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்தில் பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எட்டயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கழுகாசலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் கீழே விழுந்த ரமேஷ், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.







