உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கூட்டம்
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனைப்படி
நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.

உதவிப் பேராசிரியர் மகாராஜன் முன்னிலை வகித்தார். அனைத்துத் துறை தலைவர்களும் இந்நிகழ்ச் சியில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் அரசு உயர் பதவியில் உள்ள முன்னாள் மாணவர்கள், வெளிநாட்டில் பணி புரியும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்களாக இருக்ககூடிய முன்னாள் மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டு தங்கள் கல்லூரி நாட்களின் முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்

விழாவில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் கல்லூரியின் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் கௌசல்யா மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்







