கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.
2026ம் ஆண்டிற்கான கருப்பொருள் வாழ்க்கைக்கு நிலையான தொடக்கம், தாய்ப்பாலுக்கு பலன் சேர்க்கும் செயல்களை மேலும் வலுப்படுத்துவோம் என்பதை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் இருந்து உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபபடி லட்சுமி மில் மேம்பாலம் வழியாக ஊர்வலமாக சென்று பயணியர் விடுதி வந்தடைந்தனர்.
விழிப்புணர்வு பேரணிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்.ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் விக்னேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் அனைவரையும் வரவேற்றார். உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டு பேரணியை கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சூர்யா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ் குமார், சீனிவாசன்,முத்துச்செல்வன்,ராஜ்குமார்,கிருஷ்ணசாமி,மாரியப்பன்,கண்ணன்,இளங்கோ,சுப்பிரமணியன்,நடராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா நன்றி கூறினார்.







