விஜயகாந்த் பிறந்தநாள்: கோவில்பட்டியில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
Oplus_16908288
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் சம்மந்தமாக கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் அவைதலைவர் கொம்பையாபாண்டியன் நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

பத்மபூஷன் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
மேலும் காமன் வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ராஜாமுத்துப்பாண்டி க்கு மாவட்ட தேமுதிக சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை அந்தஸ்து பெற்றும் போதிய சிறப்பு மருத்த்துநிபுனர்களும் ஸ்கேன் வசதி செய்துதரவும் சுகாதரத்துறையை வலியுறுத்தி கேட்டுகொள்ளப்பட்டது.
மேலும் போக்குவரத்துக்கு வசதியாக குண்டும் குழியுமாக உள்ள மந்தித்தோப்பு சாலையை சரிசெய்து விரிவாக்கம் செய்து தரவும் வலியுறுத்தப்பட்டது. கீழஈரால் முதல் எட்டையாபுரம் வரை காலை மற்றும் மாலை வேளையில் இயங்கி வந்த அரசு பேருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கவில்லை இதனால் சுற்றியுள்ள கிராமபகுதி பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் கஷ்டப்படுகினறன்ர் பலமுறை மனு அளித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் பேருந்து இயக்கப்படவில்லை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேமுதிக சார்பாக சாலைமறியல் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைசெயலாளர் மாரிச்செல்வம், செயற்க்குழு உறுப்பினர் பிரபாகரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி, புதூர் மேற்கு ஒன்றியசெயலாளர் மணிகண்டன், கயத்தார் கிழக்கு ஒன்றியசெயலாளர் அருண், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராமசாமி பாண்டியன், மாவட்ட மகளீரணி செயலாளர் வெண்ணிலா, மாவட்ட கேப்டன் மன்ற துணைசெயலாளர் மேகலிங்கம் தொண்டரணி முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்







