மாற்று கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முதன்மை செய்திதொடர்பாளர் பொறுப்பு: விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி, கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தலைமைக் கழக நிர்வாகிகள் & பொறுப்பாளர்கள்:
இணைப் பொதுச்செயலாளர்: சி.டி.ஆர். நிர்மல்குமார் (தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்)
துணைப் பொதுச்செயலாளர்: ஆ.ராஜ்மோகன் (தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர் மற்றும் அணி பொறுப்பாளர்)
ஒருங்கிணைப்பாளர்கள்: எஸ். ரமேஷ், கேத்தரின் பாண்டியன், க.சி.தி.அனந்தஜித் மகியா.
புதிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்:
முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்:
அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகித் த.வெ.க.வில் இணைந்த வைகைச்செல்வன், வி.பி.கலைராஜன், சி.மகேந்திரன், ஓய்.ஜவஹர் அலி மற்றும் வா.புகழேந்தி ஆகியோர் முதன்மைச் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் எம்.சத்யகுமார், எஸ்.வீர விக்னேஸ்வரன், எம்.கே.தேன்மொழி பிரசன்னா, அமெரிக்கை வி.நாராயணன், வழக்கறிஞர் ஏ.சசிரேகா, பழ.செல்வக்குமார், விவேக் கணநாதன்.

மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
முகில் வீரப்பன் (எ) மு.க.சிவகுமார், மு.ஞான செல்வின் இன்பராஜ் (எ) மு.ஞா.செ.இன்பா, ச.முஹமது இப்ராஹிம் (எ) ராவுத்தர் இப்ராஹிம், ஜெகதீசபாண்டியன், பி.கே.ஜெயக்குமார், பம்மல் டி.கந்தசாமி, ஆர்.கே.ஜலீல், தேவகுமார், மு.சௌந்தரராஜா.
மாநில வலைத்தளச் செய்தித் தொடர்பாளர்கள்:
தமிழன் ராகுல்காந்தி (எ) ராகுல்காந்தி, சு.தியாகராஜன், நரேஷ்குமார் ராஜேந்திரன்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், கட்சியின் ஆக்கப்பூர்வப் பணிகளைக் தனது ஆலோசனைப்படியும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.







