சென்னை அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு; அமைச்சர் ஆனந்த் நடவடிக்கை

சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை 142-வது வட்டத்திற்குட்பட்ட மறைமலை அடிகள் பாலத்தின் கீழ், அடையாறு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள திடீர் நகர் பகுதியில், அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடு மற்றும் கழிப்பறை வசதி இல்லாதது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் , ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஆனந்த் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்தார்.

அப்போது, வரவிருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக அடையாறு ஆற்றில் தேவையான தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், திடீர் நகர் பகுதி மக்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இன்றே Mobile Toilet உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர நடவடிக்கை தொடங்கப்பட்டது







