தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் 24 பொறிவைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அலுவல் ரீதியான பணிகளைச் செய்வதற்காக ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்டு பெற்ற அரசு ஊழியர்கள் (இணை ஆணையாளர் அறநிலையத்துறை, வட்டாட்சியர், இளநிலை உதவியாளர், உதவி மின் பொறியாளர், மின்வாரிய வணிக ஆய்வாளர், சமூகநல விரிவாக்க அலுவலர், கிராம நிர்வாக […]
தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு..வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026- 27ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சியை மாணவர்கள், இளைஞர்களுக்கு வழங்கிய […]
த வெ க அரசின் முதல் பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் 2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘Blast Blast’-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste’ எனச் சொல்லும்படிதான் இருக்கு! அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version பட்ஜெட்! மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, […]
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைமையிலான் அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அறிவிப்புகள் விவரம் வருமாறு :- *தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திருச்சிலுவைபுரம் உள்ளது. அங்கு பள்ளி செல்லும் நேரத்தில், போதிய அரசுப் பேருந்து வசதி இல்லை. எனவே, கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து தங்களின் கிராமத்திற்குப் பேருந்துஇயக்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க பொதுமக்கள் முடிவு செய்தனர். இதன்படி, கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர், பள்ளிச் சீருடையில் இருந்த மாணவ, மாணவிகளை திரட்டிக் கொண்டு […]
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஆகஸ்ட் 12 முதல் 23 வரை தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழக பெண்கள் ஜூனியர் அணி பி டிவிஷனில் கலந்து கொண்டு விளையாட உள்ளது. தமிழக ஜூனியர் பெண்கள் ஆக்கி அணிக்கான பயிற்சி முகாம்,கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. முகாமில் 23 வீராங்கனைகள் பங்கேற்று பயிற்சி பெற்று வந்தனர்.இதில் 18 பேர் கொண்ட தமிழக […]
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் இன்று காலை கைது செய்தனர். காலை 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து சென்றனர். . இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை […]
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதையடுத்து, அதைக் கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது: “சட்டமன்றத்தில் தி.மு.க.வினரின் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறும் த.வெ.க. அரசு, பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. த.வெ.க. அரசு […]
திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றுள்ளனர் . இதனிடையே, சென்னை ஐகோர்ட்டில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி […]
திருச்சி – மதுரை நான்கு வழிச்சாலையில் மேலூர் அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். சென்னை கோயம்பேடு பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (55), உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜகுமாரி (51). இவர்களது மகன்கள் பாலாஜி (31) மற்றும் ஸ்ரீராம் (27). பாலாஜியின் மனைவி ஐஸ்வர்யா, ஸ்ரீராமின் மனைவி ரஞ்சனா. ஸ்ரீராம் – ரஞ்சனா தம்பதிக்கு பிரணிகா ஸ்ரீ என்ற 1½ வயது […]







