தவெக அரசின் முதல் பட்ஜெட்; அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைமையிலான் அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அறிவிப்புகள் விவரம் வருமாறு :-

*தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்க்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டம், நடப்பாண்டில் 352 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*’வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.
*பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

*பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*5000 அரசு பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும்.
*பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* ‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் போதைப் பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*உயர் கல்வித் துறைக்கு ரூ.8393 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும்.
*போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழில்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
*2031-ம் ஆண்டுக்குள் பொறியியல கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.







