தமிழக ஜூனியர் பெண்கள் ஆக்கி அணியினருக்கு கோவில்பட்டியில் பயிற்சி
Oplus_16908288
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஆகஸ்ட் 12 முதல் 23 வரை தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் தமிழக பெண்கள் ஜூனியர் அணி பி டிவிஷனில் கலந்து கொண்டு விளையாட உள்ளது.

தமிழக ஜூனியர் பெண்கள் ஆக்கி அணிக்கான பயிற்சி முகாம்,கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது.
முகாமில் 23 வீராங்கனைகள் பங்கேற்று பயிற்சி பெற்று வந்தனர்.இதில் 18 பேர் கொண்ட தமிழக ஜூனியர் பெண்கள் அணி ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ மனோகரன், பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார், தேர்வு குழு தலைவர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளை அறிவித்தனர்
தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் பெயர்கள் வருமாறு :-
கோல் கீப்பர்- பிரியங்கா, தன்யா ஸ்ரீ,
தடுப்பு ஆட்டக்காரர்கள்- கிருத்திகா தேவி, சிவப்பிரியா, இசை அரசி, மஞ்சு, தட்சணா தேவி, கனிமொழி, கௌசல்யா, பாவனா, ஜோவினா டெப்னி,

முன் கள ஆட்டக்காரர்கள்- நவ்யா, ஹரிதா, சுவாதி சர்மா, கோபிகா, சித்ரா மஞ்சுஷா, பிரியதர்ஷினி, தாமரைச்செல்வி,
பயிற்சியாளர்- பிரபு
துணை பயிற்சியாளர்- விக்டோரியா அணி மேலாளர் சந்தியா பிசியோதெரபிஸ்ட் ரம்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் நாளை முதல் மதுரையில் பயிற்சி மமேற்கொண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இருந்து புனே புறப்பட்டு செல்கின்றனர்







