விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கூறப்ப்படுகிறது. அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பத்தின்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். எனினும், இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில மணிநேரம் கழித்து அவரும் […]
சிறு,குறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட கலந்தாய்வும் வுக் கூட்டம், கோவில்பட் டியில் மாவட்டத் தலைவர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் குளத்தூர் ரவி விருந்தினராக சிறப்பு கலந்துகொண்டு 20க்கும் மேற் பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து வணி கர் சங்கங்களின் பேரமைப் பின் மாநிலத் தலைவர்எம்.குளத்தூர் ரவி செய்தியாளர் களிடம் பேசுகையில் கூறியதாவது :- சிறுகுறு தொழில்களுக்கு கடந்த கால அரசுகள் எது […]
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 3 சிறப்பு டாக்டர்கள், எம்.ஆர். ஐ.ஸ்கேன் வசதி; அமைச்சரிடம்
மதிமுக எம் பி துரை வைகோ வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- இன்று (26.07.2026) தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜை சென்னையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் கடந்த 25.6.2026 அன்று நான் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தொடர்பான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினேன். முதலாவதாக, எனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் […]
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் 444-வது பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதலாம் திருப்பலியும், 6 மணிக்கு இரண்டாம் திருப்பலியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், பேராலயப் பங்குத்தந்தை ஸ்டார்லின் முன்னிலையில் பனிமய மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார்கள் அமைத்துக் கொள்ள
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டியே (இணைந்தே) பார் தொடங்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார்களைத் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 ச சதுர மீட்டராக’ உயர்த்தப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம், கோவில்பட்டியில் மாவட்டத் தலைவர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் குளத்தூர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான அசோக்குமார், ராஜ்மோகன்,வெற்றி வேல் திரு. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சதீஸ் மற்றும் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. […]
டெல்லி CISCE வாரியத்துடன் இணைக்கப்பட்ட கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் கிட்ஸ் யுனிவர்சிட்டி பள்ளி சார்பில், மண்டல அளவிலான CISCE ஆக்கி போட்டி இன்று ஜூலை 25 தொடங்கியது. நாளை 26 ந் தேதியும் நடக்கிறது. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் தொடங்கிய போட்டியில், மண்டலத்திற்குட்பட்ட 11 முன்னணி CISCE பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இத்தொடரில் மொத்தம் 54 போட்டிகள்** நடைபெற உள்ளது. 14 வயது 17 வயது 19 வயதுக்குட்பட்டோருக்கான […]
தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 56). கணவரால் கைவிடப்பட்ட இவர், தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்துலட்சுமி, கடந்த 15-ம் தேதி மகள் வெளியூருக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது […]
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிகக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சிலர் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கடராமன் அறிவுறுத்தலின்படி, உதவி வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் உதவியாளர்கள் அடங்கிய அலுவலர்கள் குழுவினர் நேற்று (24.7.2026) பழைய பேருந்து நிலைய பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடந்த 6 […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து என்ற ஜி.பி.முத்து (45). யூடியூபரான இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே கோயில் கட்டுவது தொடர்பாக, அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நீண்டநாட்களாக முன்விரோதம் இருந்து வருகிறது இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவில் ஜி.பி.முத்து மற்றும் அவரது தம்பி இசக்கிமுத்து ஆகியோரது வீடுகளின் முன்பாக சிலர் கோழியை அறுத்து பலி கொடுத்து பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த ஜி.பி.முத்துவின் […]







