கோவையில் ஹேக்கத்தான் போட்டி : கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் பரிசு பெற்றனர்
Oplus_16908288
கோயம்புத்தூர் Dr. NGP தொழில்நுட்பக் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி code zap 36 hours என்ற தலைப்பில் 36 மணி நேரம் இடை விடாது நடைபெற்றது.

இப்போட்டியில் கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். கணிப்பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவர் மகாராஜா முதல் பரிசாக ரூபாய் 10000 மற்றும் சிங்கப்பூரில் நடைபெறும் தொழில்நுட்ப கருத்தரங்கிற்கு code zap கம்பெனி மூலம் இலவசமாக பயணம் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கணிப்பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவர் ராகுல் இரண்டாம் இடமாக ரூ. 5000 பெற்றார். கணிப்பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவி பிரீத்தா மூன்றாம் இடமாக ரூ. 3000 பெற்றார். கணிப்பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவி விஜயலட்சுமி நான்காம் இடம் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் விஜயன், முதல்வர் ரவீந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்







