கோவில்பட்டியில் விடுமுறை நாள் பள்ளி மாணவர் ஆக்கிப்போட்டி
Oplus_16908288
79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆ க்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நடந்து வருகின்றன

கடந்த 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன .
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி துவக்கி வைத்தார். பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார் கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர் .
மாலை நடைபெற்ற போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட் அணியினரும் கயத்தார் மேல்நிலைப்பள்ளி அணியினரும் மோதிய ஆட்டத்தில் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் முடிவு பெற்றது.
போட்டியின் நடுவர்களாக , மாரியப்பன், கௌதமன், காளிதாஸ் அஸ்வின் பேபி, ஆகியோர் செயல்பட்டனர் போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்செல்வம் வேல்முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் A பிரிவில் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 6 புள்ளிகளும் தூத்துக்குடி சீனாவானா அரசு மேல்நிலைப்பள்ளி, 3 புள்ளிகளும் பெற்று முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டனர்

B பிரிவில் கயத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் 7 புள்ளிகளும் நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட் அணியினர் 4 புள்ளிகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர் .
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (12.7.2026 ) காலை 6.30 மணி அளவில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா அணியினரும் நாடார் மேல்நிலைப்பள்ளி ப்ளூ அணியினரும் விளையாட உள்ளனர்.
இரண்டாவது போட்டியில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியினரும் வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாட உள்ளனர்







