தூத்துக்குடியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது
Oplus_16908288
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் சிக்கினார் கள்.

தாளமுத்துநகர், தாய்நகரை சேர்ந்த சந்தோஷ் குமார் (19), தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மரிய அந்தோணி ஆகாஷ் (19) மற்றும் தாளமுத்துநகர், சிலுவைப் பட்டியை சேர்ந்த அந்தோணி ஜெகன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின்போது அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் மீது NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்,கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 100/9514144100 என்ற அவசர உதவி எண்ணிலோ அல்லது Drug Free Tamil Nadu App மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்







