ஓடும் ரெயிலில் பயணிகளை அச்சுறுத்தித் நகை பணம் செல்போன் பறித்துச் சென்ற வழக்கில், 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி ரெயில் நிலையத்தில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புன்னைவனம் பகுதியைச் சேர்ந்த ராமைய்யா மகன் பிச்சையா (55) என்பவரிடம் 4 பேர் கும்பல், கைப்பேசி மற்றும் சட்டைப் பையிலிருந்த ரூ.100 ரொக்கப் பணத்தை கத்திமுனையில் பறித்துக் கொண்டு தப்பியோடியது.. இது போல் தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த மரிய […]
த.வெ.க. அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு எம்.எல்.ஏ. இடம்பெறுவார் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று இரவு அறிவித்தார். இதுதொடர்பாக திருமாவளவன் எம்.பி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்…. அப்போது அவர் கூறுகையில், “த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்க முடிவு எடுத்தோம். அதன் அடிப்படையில்… வெளியில் இருந்து ஆதரவு என கடிதத்தில் தெரிவித்தோம். ஆனால் அமைச்சரவை யில் இடம்பெற வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். த.வெ.க. தரப்பில் இருந்து அமைச்சரவையில் இடம்பெற வெளிப்படையாக […]
தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 23 பேருக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றனர். இதனைத்தொடர்ந்து புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தசூழலில், இன்று பதவியேற்றுக்கொண்ட […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகதுணைப் பொது செயலாளர், கனி மொழி எம்.பி பேசியதாவது:- எதிர்பார்க்காத சூழலில் நாம் நின்று கொண்டிருக் கிறோம். அத்தனை பேருக்கும் தெரியும். தேர்தல் வெற்றி, தோல்வி என்பது நமக்கு புதிதான ஒன்றில்லை. எத்தனையோ,ஏற்றத்தாழ்வுகளைகண்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். நம்முடைய முதலமைச்சர் யாராலும் ஜீர ணிக்க முடியாத தேர்தல் […]
கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட சிந்தாமணி நகரில் உள்ள சிந்தாமணி விநாயகர் கோவிலில் 10ம்ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கடந்த மே15ம்தேதி பந்தல் நாட்கால் நடப்பட்டு இன்று 21ம் தேதி காலை வருஷாபிஷேக விழா நடந்தது. காலை 5 மணிக்கு மேல் மஹா கணபதி ஹோமம், 8 மணிக்கு மேல் மஹா பூர்ணாகுதி,அதனைத் தொடர்ந்து சிந்தாமணி நகர் பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்த குடம் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலை வந்தடைந்தனர், […]
தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 23 அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இலாகா விபரம் பின்வருமாறு;- அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் பட்டியல்; 1ஸ்ரீநாத் – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை 2எஸ்.கமலி – கால்நடைத்துறை 3.சி.விஜயலட்சுமி – பால்வளத்துறை […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 9-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன. எனினும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவ மனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் மே மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான24 ம் தேதி கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது,. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் […]
தமிழ்நாட்டின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம்; திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்திற்குத் திரண்டு வரும் உடன்பிறப்புகளின் முகம் கண்டு, உங்களில் ஒருவனான நான் ஊக்கம் பெறுகிறேன். என்னைக் கண்ட நொடியில், உடன்பிறப்புகள் தங்கள் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த கவலையிலிருந்து விடுபடுகிறார்கள். அவர்களின் உணர்வு மழையில் நான் நனைகிறேன். சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளின்.. உணர்வுகளையும் கவனிக்கிறேன். தேர்தல் முடிவுகளை கடந்த கழக உணர்வே நம் வலிமை…. வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; […]
அமைச்சர் பதவி என்ற சுகத்துக்காக சி.வி.சண்முகம் இந்த இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்; அக்ரி
எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவின் கொறடாவாக நியமிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் 98 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் ஆகியோர் தங்களது தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தனர். 10 தோல்வி கண்ட பழனிசாமி என மு.க.ஸ்டாலின் சொல்வார். ஆனால் தற்போது அவர்தான் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். நேற்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை […]







