• October 22, 2026

விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

 விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட சிந்தாமணி நகரில் உள்ள சிந்தாமணி விநாயகர் கோவிலில் 10ம்ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

கடந்த மே15ம்தேதி பந்தல் நாட்கால் நடப்பட்டு இன்று 21ம் தேதி காலை வருஷாபிஷேக விழா நடந்தது.

காலை 5 மணிக்கு மேல் மஹா கணபதி ஹோமம், 8 மணிக்கு மேல் மஹா பூர்ணாகுதி,அதனைத் தொடர்ந்து சிந்தாமணி நகர் பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்த குடம் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலை வந்தடைந்தனர்,

பின்பு சிந்தாமணி விநாயகருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்களும்,கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலவருக்கு அபிஷேகங்கள் நடந்தது.அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சிந்தாமணி விநாயகர் கோவில் கமிட்டி தலைவர் பால்ராஜ் தலைமையில் முருகன் சுபாஷ் சந்திரன், முத்தையா, உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *