தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் 23 -ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சி களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் […]
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,கூறியதாவது:- தமிழக தேர்தல் களத்தில் கடந்த இருவாரத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு பெரிய அலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கொங்குபகுதி, டெல்டா பகுதி என அனைத்து இடங்களிலும் திமுகவிற்கு எதிராக மக்களிடம் இருக்கும் கோபம் முழுமையாக களத்தில் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட 33சதவீத […]
சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். \ 2-வது கட்டமாக நேற்று விஜய் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் ‘ரோடு ஷோ’ நடத்தி ஆதரவு திரட்டினார். இதையடுத்து வயர்லஸ் சாலையில் உள்ள அந்தோணியார் கோவில் அருகில் வந்ததும் பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் அந்த ஆலய வாசலுக்கு வந்தார். அங்கு பங்குத்தந்தை அவரை வரவேற்றார். இதனை […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 26 ம் தேதி கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது,. காலை 10 மணி முதல் […]
வாக்குப்பதிவு முடிந்ததும் இயந்திரங்களை திரும்பப் பெறும் பணிகள்: மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களைத் திரும்பப் பெறும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் வரவேற்பறைப் பணியாளர்கள் […]
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அதில், 2021 முதல் தாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனக்கு அழுத்தம் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளியிட நேரிடும் என்றும் அந்த மனுவில் அவர் எச்சரித்திருந்தார். இன்று (ஏப்ரல் 20) இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப […]
விருதுநகர் தாலுகா சங்கரலிங்காபுரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (வயது 52). இவர் கட்டனார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வந்தது. மாவட்ட வருவாய் அதிகாரியின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 5 அறைகளில் பட்டாசு உற்பத்தி நடந்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலையில் அந்த ஆலைக்கு ஆண்களும், பெண்களுமாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் […]
கோவில்பட்டி லாயல் மில் காலனியில் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகிஉத்தரக்குமார் என்பது தெரிய வந்தது. அவரது பைக்கின் முன்பக்கத்திலிருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் 35 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா […]
தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார். ரோடு ஷோக்கு இடையே, திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆலயத்தில் மண்டியிட்டு நடந்து சென்று விஜய் பிரார்த்தனை செய்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்து முடித்த பிறகு விஜய் மீண்டும் ரோடு ஷோ புறப்பட்டார். விஜய்யை பார்க்க வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாகமாக திரண்டு இருந்தனர். விஜய்யை வரவேற்று பூக்களையும், பரிசு பொருட்களையும் வீசினர். விஜய்யின் ரோடு ஷோவால் திருச்சியில் கடும் […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது இந்தத் தேர்வில் மொத்தம் 34 வீரர்கள் கலந்து கொண்டனர் இதிலிருந்து பயிற்சி முகாமிற்கு 21 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பின்வருமாறு கோல் கீப்பர் : முத்து ராஜேஷ், ஈஸ்வர் தடுப்பாட்டக்காரர்: முருகேஷ், நவீன், ராகுல் , கௌதம், பிரியன், தனுஷ் பாண்டியன், கௌதம், அருண், கிரி , நவீன், முன்கள ஆட்டக்காரர்கள்: விஷால், சுகுமார், சிபி, […]







