விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் துணிகர கொள்ளை நடந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுமார் 122 பவுன் நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளரின் வீட்டில் போலீஸ் மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு ஓடியது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். […]
வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய போர் 2 வாரங்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. ஈரான் போர் 2 வாரம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், பதற்றம் இன்னும் ஓயவில்லை. வளைகுடா பிராந்தியத்தில் போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்கும் நோக்கில் பாகிஸ்தானில் கடந்த 11-ந்தேதி நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் உலக நாடுகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன. உலக நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோக சங்கிலியில் தடை நீடிக்கிறது. குறிப்பாக […]
மராட்டிய மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் என்னும் ஐ,.டி,நிறுவனத்தில் 20 வயதான இளம்பெண் பணியாற்றி வந்தார். இந்து மதத்தை சேர்ந்த அந்த இளம்பெண் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது இஸ்லாமிய மத நடைமுறைகளை பின்பற்றத்தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை அந்நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என நிறுத்தினர். மேலும், டிசிஎஸ் நிறுவனத்தில் மத மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுப்பி அந்த இளம் பெண்ணின் குடும்ப உறுப்பினர் நாசிக் போலீசில் புகார் அளித்தார். புகாரின் […]
பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) தேர்தல் பிரசாரத்திற்காக நாகர்கோவில் வருகை தர உள்ளார். இதையொட்டி, நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தட மாற்றங்கள் 15.4.2026 அன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை அமலில் இருக்கும். எனவே, ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையம் செல்பவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளிமாவட்ட வாகனங்கள்: பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், WCC, கிருஷ்ணன்கோவில், வடசேரி ஆகிய பகுதிகளில் […]
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்போது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். \\பிரசாரத்தின்போது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டது. அதன் பின்பு மருத்துவமனையில… சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக திடீரென அலர்ஜி ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மேலும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தொடர்ச்சியாக சிகிச்சை எடுக்கப்பட வேண்டிய நிலை இருக்கும் என்ற […]
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 51 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வரும் இந்த வாட்ஸ் அப்பில், அவ்வப்போது புதிய அப்டேட்களையும் பாதுகாப்பு அம்சங்களையும் மெட்டா வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்தவும் ஒரு ஆப்ஷன் உள்ளது. இது பலருக்கும் தெரிவது இல்லை. அதாவது, வாட்ஸ்அப்பில் “அறியப்படாத […]
கடந்த 2015-16ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது…. வருமானத்தை […]
தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரை, வசந்த காலத்தின் தொடக்கமாகவும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்கிறது. “சித்திரை” என்ற சொல் “சித்திரா” என்ற நட்சத்திரத்தின் பெயரிலிருந்து உருவானது. இது ஒளி, அழகு மற்றும் பிரகாசத்தைக் குறிக்கிறது. வானியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இம்மாதம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிப்பதைக் குறிக்கிறது. இது மேஷ ரவி என்று அழைக்கப்படுகிறது. வானியல் ரீதியாக, இது பூமியின் வட அரைக்கோளத்தில் வசந்த […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் நடக்கும் விழாக்களில் பங்குனி பெருந்திருவிழா மிகவும் முக்கியமானதாகும். 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு பங்குனி பெருந்திருவிழா கடந்த 5 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடை திறந்ததும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விசேஷ பூஜைகளுக்கு பிறகு கோவில் கொடிமரத்தில் […]
தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; திமுகவில் இணைந்த அஜிதா
தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தார். கடந்த 2ஆண்டுகளாக தவெகவுக்காக தீவிர களப்பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில், கடந்த ஆண்டு தவெகவுக்கு கட்சிப் பொறுப்பாளர்களை விஜய் நியமித்தார். அப்போது, தனக்கு தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என அஜிதா எதிர்பார்த்திருந்தார். ஆனால், கட்சி பொறுப்பாளர்கள் பட்டியலில் அஜிதாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பனையூரில் உள்ள தவெக அலுவகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த அஜிதா, […]







