தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ம் ஆண்டு மாணவர்கள் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவ மனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகின்றன. இந்த முகாம் நாளை 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடத்தப்படுகிறது,. காலை 9 […]
விளாத்திகுளம் அருகே மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாணவி கொலை வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் பிரிவு வட்டத் தலைவர் நீதிப்பாண்டியன் தலைமை தாங்கினார்.. மாவட்டத் துணைத் தலைவர் சிவனுப்பாண்டி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் நிரஞ்சன் குமார்,பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய […]
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1, முதல் புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 ஆண்டுகள் பழமையான ‘வருமான வரிச் சட்டம் 1961’-ஐ மாற்றியமைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளனர். எளிமைப்படுத்தப்பட்ட சட்டப் பிரிவுகள் வரி செலுத்துவோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சட்டத்தின் மொழி நடை மாற்றப்பட்டுள்ளது. சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-லிருந்து 536-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சட்டத் தொகுதிகள் […]
சர்வதேச வன நாளை முன்னிட்டு கேரளா அரசு வனத்துறை மூணாறில் உள்ள மீசை புலி மலை என்ற 8842 அடி உயரம் உடைய மலை சிகரத்தில் ஏறுவதற்கு அழைப்பு விடுத்திருந்தது. கேரள மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட 34 பேர் கொண்ட குழுவில் தமிழகத்திலிருந்து 3 பேர் கலந்து கொண்டனர். வனத்துறையில் முன்பதிவு செய்தவுடன் தேர்வு செய்து அழைத்துச் செல்லும் பயிற்சியாகும். &
விளாத்திகுளம் அருகே பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறப்பாக பணிபுரிந்த 25 போலீஸ் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பாராட்டு சான்றிதழ் பெற்ற போலீஸ் அதிகாரிகள் விவரம் வருமாறு:- விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் […]
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் :தனியார் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்
கடந்த மார்ச் 3-ஆம் தேதி, திருச்செந்தூர் கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள், தங்களது மேலாளரின் பிறந்தநாளை கொண்டாடினர். இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள பொது தரிசன வரிசை கட்டிடத்தை பயன்படுத்தியதோடு, அங்கு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி, பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து கோயில் நிர்வாகம் நடத்திய விசாரணையில்: சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை சாத்தப்பட்டிருந்த மதிய வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. […]
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்தைகளில் ஒன்றான எட்டயபுரம் ஆட்டுச்சந்தை, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். சாதாரணமாக இங்கு வாரந்தோறும் சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும். தீபாவளி, ரமலான், பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நடைபெறும் சிறப்புச் சந்தைகளில் இந்த வர்த்தகம் ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை உயரும். இன்று (சனிக்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதால், நேற்று நடைபெற்ற சிறப்புச் சந்தையில் வழக்கத்தை விட அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு […]
தமிழகத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீட்டுபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது இந்த நிலையில பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், அகில இந்திய புரட்சித்தலைவர் […]
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியே பொது, செலவினம் மற்றும் காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் பொதுப் பார்வையாளர்களாக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, எலுச்சூரி ரத்னாகர ராவ் […]







