கோவில்பட்டியில் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வழக்கறிஞர் பிரிவு வட்டத் தலைவர் நீதிப்பாண்டியன் தலைமை தாங்கினார்.. மாவட்டத் துணைத் தலைவர் சிவனுப்பாண்டி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் நிரஞ்சன் குமார்,பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது.
நீதிமன்றப் பணிகளுடன் இணைந்து கட்சியை வலுப்படுத்துவதற்கான வழக்கறிஞர்களின் பங்களிப்பு.
வரும் தேர்தலில் வழக்கறிஞர் ஆற்ற வேண்டிய களப்பணிகள் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கோவில்பட்டி மூத்த வழக்கறிஞர்கள் மோகன்தாஸ், ஆழ்வார்சாமி சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பொன்ராஜ், நகரத் தலைவர் காளிதாசன் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







