டாக்டர் ராமதாஸ் – சசிகலா உருவாக்கிய புதிய கூட்டணி ; 234 தொகுதிகளிலும் போட்டி
தமிழகத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீட்டுபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது

இந்த நிலையில பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராமதாஸ், சசிகலாவின் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தனது தலைமையிலான கூட்டணியில் தானே முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதாக தெரிவித்த ராமதாஸ், தங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் கூறினார்.

மேலும், கொள்கை அளவில் ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.







