மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய எரிவாயு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி க்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கனிமொழி எம்பி நேரில் வழங்கினார். கடிதத்தில் கூறி இருந்ததாவது:- எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை கடந்த ஆறு மாத சராசரி அடிப்படையில் 65% ஆகக் குறைக்கும் முடிவை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோடைக் காலத்தில் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி மகளிர்க்கழகம், தமிழ்த்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் முதல்வர் ர் மூ.சுப்புலெட்சுமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி ‘பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி‘ நடைபெற்றது. இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் க.க.நிவேதிதா மற்றும் […]
தேர்தல் முடியும் வரை டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் அடிக்கடி டெல்லியில் சிபிஐ விசாரணை செல்வதால் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை செய்ய முடியவில்லை என்றும் ஆகவே தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆவதற்கு தடை விதிக்க நடிகர் விஜய் நீதிமன்றம் செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி […]
கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிதம்பரநாடா காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி பாதுகாப்பு மேம்பாடு பற்றிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த கருத்தரங்கம் நாளை 12-3-26 வியாழன் காலை. 10 மணிக்கு தொடங்குகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எவ்வாறு பாதுகாப்பாக செயல்படுவது , அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து மதுரை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் ஆர்.சித்தார்தன், கோவில்பட்டி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார […]
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளுக்காகப் பல்வேறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக வெளி மாநிலங்களிலிருந்து துணை ராணுவப் படையினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து எல்லை பாதுகாப்புப் படையினர் (BSF) 85 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர். இவர்களை உள்ளடக்கிய கொடி […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான ஒரு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு (HACKRENA 2026) கணிப்பொறி துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கணிப்பொறி துறையின் வளர்ச்சி குறித்தும், அதன் தொழில்நுட்பம் பற்றியும் விளக்கி பேசினார். கருத்தரங்கில் காகித விளக்கக்காட்சி, மென்பொருள் வடிவமைத்தல், பின்னோக்கு பொறியியல் […]
கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் கணினி பயன்பாட்டு துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், வலுவான பெண்கள் உலகை வலுப்படுத்துகிறார்கள் என்ற தலைப்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர் செல்வராஜ்,கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் கணினி பயன்பாட்டு துறை தலைவர் செல்வலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக […]
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. மேலும் சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு […]
கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி டென்னிசன் சாலையில் இயங்கி வரும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் (வயது 46), தனது கண்காணிப்பில் உள்ள வங்கிக் கிளைகளில் ஆய்வு செய்தபோது நகை மோசடி நடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த கீழக்கல்குறிச்சியைச் சேர்ந்த ரகுவரன்(36) என்பவர், மற்றவர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 கோடி வரை மோசடி செய்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வங்கியின் முதன்மை […]
ஈரானில் இருந்து பாரபின் மெழுகு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன் விலையும் உயர்ந்து இருப்பதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான பாரபின் மெழுகின் விலை கடந்த இரண்டு வாரங்களில் கிலோவிற்கு ரூ.80 லிருந்து ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. சீரான பற்றவைப்பு மற்றும் நிலையான எரிப்பை உறுதி செய்வதற்காக, மரம் மற்றும் மெழுகு ஆகிய இரண்டின் தீப்பெட்டிகளையும் தயாரிப்பதில் பெட்ரோலிய […]







