தேர்தல் முடியும் வரை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக விலக்குகோரி நீதிமன்றம் செல்லும் விஜய்
தேர்தல் முடியும் வரை டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
தேர்தல் நேரத்தில் அடிக்கடி டெல்லியில் சிபிஐ விசாரணை செல்வதால் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை செய்ய முடியவில்லை என்றும் ஆகவே தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆவதற்கு தடை விதிக்க நடிகர் விஜய் நீதிமன்றம் செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தேர்தல் பரப்புரை மற்றும் அரசியல் பணிகளைக் காரணம்காட்டி, நேரில் ஆஜராவதிலிருந்து 15 நாட்கள் விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
ஒருவேளை சிபிஐ இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, தொடர்ந்து சம்மன் அனுப்பினால், விஜய் நீதிமன்றத்தை அணுகி தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அல்லது சம்மனை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் விஜய் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.







