பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி மகளிர்க்கழகம், தமிழ்த்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் முதல்வர் ர் மூ.சுப்புலெட்சுமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி ‘பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி‘ நடைபெற்றது.

இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் க.க.நிவேதிதா மற்றும் தூத்துகுடி மாவட்ட நிதிக்கல்வி அறிவு வல்லுநர் சா.ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்,
சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.க.நிவேதிதா ‘மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புச்சட்டங்கள்‘ என்னும் தலைப்பில் பெண்களுக்கு சுய ஒழுக்கம் வேண்டும் என்பதையும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அதனை எதிர்கொள்ளும் முறைகளையும் வழிகளையும் மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுமார் 230 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறைத்தலைவருமான பெ.சித்ரலேகா, தமிழ்த்துறைத்தலைவர் மா.சங்கரேஸ்வரி, உதவிப்பேராசிரியர்களான ச.ஜெயகுரும்பன், ந.அசோக்குமார், இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் தேவதர்ஷினி, மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.







