• March 11, 2026

தீப்பெட்டி ஆலைகளில் பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கம்

 தீப்பெட்டி ஆலைகளில் பாதுகாப்பு மேம்பாடு  கருத்தரங்கம்

கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிதம்பரநாடா காமாட்சி அம்மாள்  திருமண மண்டபத்தில் தீப்பெட்டி பாதுகாப்பு மேம்பாடு பற்றிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த கருத்தரங்கம்  நாளை 12-3-26 வியாழன் காலை. 10 மணிக்கு தொடங்குகிறது.

தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்  எவ்வாறு பாதுகாப்பாக செயல்படுவது , அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து மதுரை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் ஆர்.சித்தார்தன், கோவில்பட்டி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர், எஸ். ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள் .

தீப்பெட்டி தொழில்பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளது. எனவே  இந்த கருத்தரங்கு  கூட்டத்தில்  தீப்பெட்டி உற்பத்தியாளார்கள் கலந்து பயன்பெற வேண்டும் என்று  கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.  மிகவும் முக்கியத்துவாய்ந்த இந்த கூட்டத்திற்கு அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் என்று தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது;.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *