• March 11, 2026

எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில்  மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி 

 எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில்  மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி 

கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் கணினி பயன்பாட்டு துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், வலுவான பெண்கள் உலகை வலுப்படுத்துகிறார்கள் என்ற தலைப்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  கல்லூரி செயலாளர்  கண்ணன் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர்  செல்வராஜ்,கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் கணினி பயன்பாட்டு துறை தலைவர்  செல்வலட்சுமி முன்னிலை வகித்தார்.  

சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி சமூக நலத்துறை , ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி  பொன்னுமாரி கலந்துகொண்டு பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் எதிர்நோக்கும் சிக்கல்கள் அதைத் தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும், இந்த சிக்கலைத் தவிர்க்க தங்கள் சேவை மையம் தரும் உதவிகள், ஆலோசனைகள் பற்றியும் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் கணினி பயன்பாட்டு துறை மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்டு பெண்மையை போற்றுவோம் மற்றும் பெண்கள் உரிமையை காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

தொடக்கத்தில்  கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மாணவி  திவ்யதர்ஷினி வரவேற்று பேசினார். முடிவில் கணினி பயன்பாட்டு துறை மாணவி பிரபா நன்றி கூறினார்.

 கல்லூரி கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள் பிரபாகரன், கற்பகம், மரிய திவ்யா,  வளர்மதி, தேவிஶ்ரீ மற்றும் திலக்ராஜா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  செய்து இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *