• March 11, 2026

கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் 

 கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் 

Oplus_16908288

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான ஒரு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு (HACKRENA 2026) கணிப்பொறி துறை  சார்பில் கல்லூரி வளாகத்தில்  நடை பெற்றது. கல்லூரி முதல்வர்  ரவீந்திரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். 

கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கணிப்பொறி துறையின் வளர்ச்சி குறித்தும், அதன் தொழில்நுட்பம் பற்றியும் விளக்கி பேசினார். 

கருத்தரங்கில் காகித விளக்கக்காட்சி, மென்பொருள் வடிவமைத்தல், பின்னோக்கு பொறியியல் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த போட்டிகளும், பிரீ பயர், புதையல் வேட்டை, போன்ற தொழில் நுட்பம் சாராத போட்டிகளும், மற்றும் கலைப் போட்டிகள் தனி நடனம், குழு நடனம், பாட்டுப் போட்டி ஆகிய போட்டிகள் நடை பெற்றது.

 பி. எஸ். என்.பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி, சிவகாசி, பி. எஸ். ஆர். ஆர்.பொறியியல் கல்லூரி, சிவகாசி, ஜிவிஎன் கல்லூரி, கோவில்பட்டி, எஸ். ஆர். என்எம்.  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாத்தூர், சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரன்கோவில், சத்யம் பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி போன்ற கல்லூரிகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கணிப்பொறியியல் துறைத் தலைவர் சித்ரா வரவேற்று பேசினார்.ஆற்றினார். கணிப்பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் பிரசாந்த்  நன்றி கூறினார்.  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *