ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, இன்று (ஜனவரி. 1) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் மற்றும் மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு […]
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக மாவட்ட தலைமை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து (முட்டை,பயறு வகைகள்,சத்துமாவு ) பெட்டகம் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில் இணை செயலாளர் ரத்தினகுமார் சார்பாக 30க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ரோட்டரி உறுப்பினர்கள் ரியல் எஸ்டேட் கண்ணன்,பூல்பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.
கோவில்பட்டி கல்லூரியில் ‘பிராண சிகிச்சை’ விழிப்புணர்வு, துறைகளுக்கு இடையேயான திறன்சார்ந்த போட்டிகள்
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இளைஞர் நலச் சங்கம் இணைந்து ‘பிராண சிகிச்சை’ பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின. கல்லூரிச் செயலர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி, GMCKS பிராண சிகிச்சை மற்றும் அர்ஹாடிக் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்களான சங்கீதா, சொர்ணலதா, நாகநந்தினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வேதியியல் துறைத்தலைவரும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியுமான பா.உமாதேவி வாழ்த்துரை வழங்கினார். சங்கீதா சூப்பர் மூளை யோகா மற்றும் இருதய […]







