கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கம் ; எடப்பாடி பழனிசாமி
கட்சியில் இருந்து செங்கோட்டையன் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- செங்கோட்டையன் திமுகவின் பி டீமாக செயல்பட்டார். கட்சி விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்த செங்கோட்டையன் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என தவறான கருத்தை கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை விளக்கியபோது அவர் ஏற்கவில்லை. ஆனால், சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் செங்கோட்டையன் பங்கேற்றார். அதுதொடர்பான பேனர்களில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. கருணாநிதி […]







