துத்துக்குடி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்
துத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் PMDK பிரதம மந்திரி திவ்வாஷ் கேந்திராமையம் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உபகரணங்கள் (MSIED Kit) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மூன்று சக்கர சைக்கிள் (கையில் இயக்க கூடியது), சக்கர நாற்காலி, காலிப்பர், தாங்கிகள், செயற்கைகால், காதொலிகருவி (காதுக்கு பின்புறம் வைக்கும் கருவி), நடைகருவி, பிரையலிகேன், மடக்கு ஊன்றுகோல்
மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர்களுக்கான தினசரி பயன்பாட்டு உபகரணங்கள் செல்பேசி ADL Kit & Cell phone பார்வையற்றவர்களுக்கான டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் போன், பார்வையற்றோருக்கான நவீன அதிரும் மடக்கு குச்சி, பேட்டரி, பொருத்திய மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தேவையான சிலிக்கான் போம் முதுகு தண்டுவட குஷன் மடக்குகுச்சி சக்கரநாற்காலி கமோடு உடன் கூடிய நாற்காலி காது கருவிகள் வாக்கர், எல் எஸ் பெல்ட், முழங்கால் பெல்ட், கழுத்துகாலர் போன்ற உபகரணங்கள் இலவசமாக வழங்க மதிப்பீட்டு முகாம்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளன,

3.11.2025 : தூத்துக்குடி
04.11.2025 : உடன்குடி
5.11.2025 : திருச்செந்தூர்
6.11.2025 : திருவைகுண்டம்
7.11.2025 : கயத்தார்
10.11.2025 : கோவில்பட்டி
11.11.2025 : ஒட்டப்பிடாரம்
12.11.2025 : புதூர்
13.11.2025 : விளாத்திகுளம்
:14.11.2025 : கருங்குளம்
17.11.2025 :ஆழ்வார்திருநகரி
18.11.2025 :சாத்தான்குளம்
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.







