தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ, கஞ்சா, திருட்டு, கொலை மிரட்டல் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18.8.2025 அன்று வீடு புகுந்து திருடிய வழக்கில் சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33). 23.8.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் கடத்திய வழக்கில் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மதுரை சாலையில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு,2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து பந்ததயத்தை தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெப்சி முனியசாமி பேரூர் மீனவரணி அமைப்பாளர் இளையராஜா (எ) ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாட்டுவண்டி பந்தயத்தில் சுற்றுவட்டார […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததானக்கழகம், மக்கள்நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில்172வது இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததானக்கழக செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்துக்குமார் முன்னிலை வகித்தார், முகாமில் 40 பேருக்கு கண்விழி பரிசோதகர் சங்கரி கண் பரிசோதனை செய்தார், 16 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் கருத்துரிமை […]
தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்., கல்லூரி வளாகத்தில்,இன்று தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. கோவில்பட்டிநேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், குளோபல் சேப்டி மேச்சஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம், சிவகாசி ஆல் இந்தியா சேம்பர் ஆப் மேச் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சாத்தூர், குடியாத்தம், தென்காசி, தருமபுரி, பொள்ளாச்சி, காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்தின. விழாவுக்கு நூற்றாண்டு விழா […]
தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா, சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா மற்றும் தூய மரியன்னை கல்லூரி சார்பில் பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா கவுரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான ஆ.சங்கர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:- .பாதுகாப்பான டிஜிட்டல் பயணத்திற்கு ஒவ்வொருவரின் பொறுப்பும், பங்களிப்பும் அவசியம். அறிமுகமில்லாதவர்கள் ஏடிஎம் அருகில் நின்று எங்களிடம் ஏடிஎம் கார்டு இல்லை எனவும், […]
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். நாகை பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து இன்று காலையில் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வாகனத்தில் நாகை புறப்பட்டார். இந்த நிலையில் நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு வருகை தந்த விஜய் பிரசார வாகனத்தில் இருந்தபடியே , அங்கு கூடி இருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:- அண்ணாவுக்கு வணக்கம். பெரியாருக்கு வணக்கம். […]
நாடு முழுவதும் தேர்தல்களில் போட்டியிடாத, தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அதன் விவரம் வருமாறு:- 1.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ஈஸ்வரன்), 2.மனிதநேய மக்கள் கட்சி (ஜவாஹிருல்லா), 3.மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி) 4.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்), 5.எழுச்சி தேசம் கட்சி, 6.கோகுல மக்கள் கட்சி, 7.பெருந்தலைவர் மக்கள் கட்சி […]
கோவில்பட்டி அருகே கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (20/9/2025) நடைபெற்றது. முகாமை திமுக துணைப் பொதுச்செயலாளர், கனிமொழி எம்.பி.குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் முகாமை ஆய்வு ஆய்வு செய்தார் . ஆய்வின்போது, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கனிமொழி, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் […]
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் (வயது 23). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரித்திகா(20) என்பவரை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிருத்திகாவை திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோரிடம் அன்புராஜ் பெண் கேட்டார்.. இருவரும் ஒரே சமூகமாக இருந்த போதிலும், திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், […]
சென்னை – நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் தவெக தலைவர் விஜய் வீடு அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அந்த இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண். இவர் விஜய் வீட்டின் பின் பக்கம் உள்ள சிறிய கேட் வழியாக பாதுகாவலர்கள் […]







