விளாத்திகுளத்தில் மாட்டு வண்டி பந்தயம்
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மதுரை சாலையில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு,2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து பந்ததயத்தை தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெப்சி முனியசாமி பேரூர் மீனவரணி அமைப்பாளர் இளையராஜா (எ) ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாட்டுவண்டி பந்தயத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. இதனை சாலையில் இருபுறத்திலும் இருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர்
போட்டியின் இறுதியில் மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.







