தூத்துக்குடி மாவட்டம் குலசேரகன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகராக குமார்பட்டர் என்பவர் பணிபுரிந்து வந்தார்.. இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குமாரின் வீடு கோவில் பின்புறம் கீழமலையான்தெருவில் உள்ளது. கடந்த ஜூன் 16-ந் தேதி குமார் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். கடந்த 13-ந் தேதி குலசேகரன்பட்டினத்திற்கு பிரியா வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, […]
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார். இதனிடையே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை […]
நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்யக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்ய
பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், தங்களது படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ.6 கோடியை திருப்பித் தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதேபோல கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை குறித்த காலத்துக்குள் தொடங்காத தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரி அந்த படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ரவி மோகனும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையில், ரூ.9 […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் எட்டையபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் என்ற மசாஜ் சென்டர் செயல் பட்டு வருகிறது. இதில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தனமாரி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடந்தது உறுதியானது. இதையெடுத்து அங்கிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த […]
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பரப்பத்தில் நாளை மறுநாள் (21-ந்தேதி, வியாழக்கிழமை) பிரமாண்டமாக நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி நடைபெறும் இந்த மாநாடு, தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் இப்படிப்பட்ட மாநாட்டை நடத்தியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 506 ஏக்கரில் […]
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கருப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விமேம்பாட்டு திட்டங்கள் தொடக்க விழா மாவட்ட ஆளுநர் தினேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார், மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்துச்செல்வம்,சீனிவாசன், பொருளாளர் நாராயணசாமி,ரவிமாணிக்கம்,உறுப்பினர்கள் கண்ணன்,மணி, கோபாலகிருஷ்ணன்,பூல்பாண்டி, கருப்பசாமி, முத்துமுருகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பள்ளி மேம்பாட்டு திட்ட பணி நன்கொடையாளர் சதீஷ்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்
நோயாளிகளின் சிறுநீரகம் விற்பனை தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன? சுகாதாரத்துறை செயலர் அறிக்கை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி சில தனியார் ஆஸ்பத்திரிகளின் ஒத்துழைப்புடன் சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் புரோக்கர்கள் மூலம் தொழிலாளர்களை அணுகி சிறுநீரகம் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகின. புகாருக்கு உள்ளான ஈரோடு, திருச்சி உள்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் திருச்சியில் […]
சட்டவிரோத பணப்பரிமாற்றம்: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு விரைவில் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006-2011-ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு கோர்ட்டு விசாரணையில் உள்ளது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றொரு மகன் பிரபு, […]
கோவில்பட்டியை அடுத்த கடலையூர் செங்குந்தர் பிரைமரி அண்ட் நர்சரி பள்ளியில் கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக யோகா போட்டி நடைபெற்றது. பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிகுமார் வரவேற்றார். விக்னேஸ்வரன் மற்றும் .யோகா குணா முன்னிலை வகித்தார்கள். ரோட்டரி உறுப்பினர்கள் கருப்பசாமி, பூல் பாண்டி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். கண்ணன் நன்றி கூறினார்.
துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 21ஆம் தேதியாகும். அன்றைய தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை […]







