கருப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விமேம்பாட்டு திட்டங்கள்
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கருப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விமேம்பாட்டு திட்டங்கள் தொடக்க விழா மாவட்ட ஆளுநர் தினேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார், மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்துச்செல்வம்,சீனிவாசன், பொருளாளர் நாராயணசாமி,ரவிமாணிக்கம்,உறுப்பினர்கள் கண்ணன்,மணி, கோபாலகிருஷ்ணன்,பூல்பாண்டி, கருப்பசாமி, முத்துமுருகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பள்ளி மேம்பாட்டு திட்ட பணி நன்கொடையாளர் சதீஷ்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்







