யோகா போட்டியில் பங்கேற்ற பிரைமரி பள்ளி மாணவர்களுக்கு பரிசு
Oplus_16908288
கோவில்பட்டியை அடுத்த கடலையூர் செங்குந்தர் பிரைமரி அண்ட் நர்சரி பள்ளியில் கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக யோகா போட்டி நடைபெற்றது.

பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிகுமார் வரவேற்றார்.

விக்னேஸ்வரன் மற்றும் .யோகா குணா முன்னிலை வகித்தார்கள். ரோட்டரி உறுப்பினர்கள் கருப்பசாமி, பூல் பாண்டி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். கண்ணன் நன்றி கூறினார்.







