சுருக்கெடுத்து தேர்வில் 30 நிமிடம் வேளை அளிக்க வேண்டும் என்று உயா்கல்வித்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது, இதுகுறித்து தூத்துக்குடி தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகி ரவிச்சந்திரன் தமிழ்நாடு உயா்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- “நாளைய தினம் 23-8-2025 தமிழ் சுருக்கெழுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக தங்களிடம் ஒரு நியாயமான கோரிக்கையை வைக்க கடமைப்பட்டுள்ளோம். சுருக்கெடுத்து தேர்வில் மாணவர்களை தொடர்ச்சியாக நாலரை மணி முதல் 5 […]
தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது; நெல்லை கூட்டத்தில் அமித்ஷா
பா.ஜ.க. மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று நெல்லை வந்துள்ளார். அவர் பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது;- “தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன். மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் பா.ஜ.க.விற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். சி.பி.ராதாகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவை […]
1942 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசை அடிபணிய வைக்க செய் அல்லது செத்து மடி எனும் முழக்கமிட்டு வெள்ளையனே வெளியேறு எனும் ஒத்துழையாமை இயக்கத்தை தொடக்கி வைத்தார் அன்று முதல் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது போராட்டத்தின் விளைவாக கோவில்பட்டயை அடுத்த கடலையூரில் ஆகஸ்ட் 22ம் தேதி வெயிலுகந்த முதலியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசால் துப்பாக்கி சூடு […]
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை 2025- 26 ஆண்டிற்கான தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் முதல் நாளான இன்று மாணவிகளுக்கான போட்டி நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறுவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். போட்டிகளை தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் கண்ணதாசன் […]
தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் விஜய் என்ற பானை விஜய் (வயது 22). இவருடைய நண்பர்கள் பூபாலராயர்புரம் 2-வது தெருவை சேர்ந்த மகராஜா மகன் முத்துக்குமார் (22), ரபேல் மகன் மரிய பெடலிஸ் சஞ்சய் (24), திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் சுனாமி நகரை சேர்ந்த ரீகன்பிரபு மகன் முத்துகவுதம் (21). இவர்கள் 4 பேரும் தூத்துக்குடி லயன்ஸ்டவுனில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் ரோட்டில் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் உப்பு குடோனில் வைத்து […]
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.. மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை முதலே […]
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் புதிய காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நடைபெற்றது. இதை அப்பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக கூடி பார்த்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன் (வயது 25), தனியார் பள்ளி வாகன ஓட்டுனர். இவரது தம்பி கவுதமன் (20), இவரது நண்பர்களான பாபு மகன் ஆதினேஷ் (21), வீரபாண்டியன் மகன் அய்யப்பன் (19), […]
கோவில்பட்டியில் இனாம் மணியாச்சி பகுதியில் அமைந்துள்ளது கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனை. இது உள்ள முழுமையான எலும்பியல் பராமரிப்பு மருத்துவமனை ஆகும். எலும்பியல் ஆராய்ச்சிக்கான முன்னணி எலும்பியல் மருத்துவமனையாக விளங்கும் இந்த மருத்துவமனை, முதுகெலும்பு/எண்டோஸ்பைன் அறுவை சிகிச்சைகள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், எலும்பியல் மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு துறையில் உலகத்தரம் வாய்ந்த சிறப்புகளைக் கொண்டுள்ளது. கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனை, இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்புக்கு ஏற்ற சூழலைக் கண்டறிய விரும்பிய ஒரு விதிவிலக்கான எலும்பியல் நிபுணர் டாக்டர் எஸ்.தாமோதரனால் […]
டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா” டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, மறைந்த கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்! மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, […]
கோவில்பட்டி அருகே குருமலையை சுற்றியுள்ள கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி சில முக்கிய புள்ளிகள்முயல்களையும், மான்களையும், மயில்ளையும் வேட்டையாடி சமைத்து விருந்து நடத்தி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் சென்றது. ‘ தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, வனவர் பிர சன்னா, வனக்காப்பாளர் பொன் முனியசாமி, பேச் சிமுத்து ஆகியோர் தலை மையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டிருந்தனர். கடம்பூர் அடுத்துள்ள […]







