கடலையூரில் தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
Oplus_16908288
1942 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசை அடிபணிய வைக்க செய் அல்லது செத்து மடி எனும் முழக்கமிட்டு வெள்ளையனே வெளியேறு எனும் ஒத்துழையாமை இயக்கத்தை தொடக்கி வைத்தார்
அன்று முதல் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது
போராட்டத்தின் விளைவாக கோவில்பட்டயை அடுத்த கடலையூரில் ஆகஸ்ட் 22ம் தேதி வெயிலுகந்த முதலியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் சங்கரலிங்க முதலியார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மாடசாமி முதலியாருக்கு இடுப்பில் குண்டு பட்டு வெளிவந்தும். ராமசாமி முதலியாருக்கு கட்டை விரலில் குண்டு பட்டு துண்டாகியும் படுகாயமடைந்தனர். மேலும் ஆங்கிலேய அரசால் நெசவு நூல் மற்றும் பாவுகள் அடித்து நொறுக்கப்பட்டன
போராட்டத்தில் 34 தியாகிகள் கலந்து கொண்டனர்
இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கடலையூரில் நினைவுஸ்தூபி அமைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலையூரில் 83வது வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட நினைவு தினத்தை முன்னிட்டு தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் விநாயகா ரமேஷ், சீனிவாசன்,முத்துச்செல்வம்,நாராயணசாமி,கண்ணன்,முத்து முருகன், பூல்பாண்டி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரிச்சாமி உள்ளிட்டோர் தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறவும்,தியாக மனப்பான்மையை அனைவரிடமும் கொண்டு செல்லவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன்,
மாவட்ட புரவலர் விநாயகர் ரமேஷ், முன்னாள் மாவட்ட உதவியாளர் முத்து செல்வம்
சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் காசநோய் பயனாளிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்
செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார்.பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்







