கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவியர் ஆக்கி போட்டி

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை 2025- 26 ஆண்டிற்கான தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் முதல் நாளான இன்று மாணவிகளுக்கான போட்டி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறுவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
போட்டிகளை தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் கண்ணதாசன் தொடங்கி வைத்தார்.

மாணவிகள் இளையோர் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஏபிசி வீரபாகு அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவில்பட்டி லக்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி அணி, தூத்துக்குடி தஸ்நேவிஸ் மேல்நிலைப் பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி தஸ் நேவிஸ் மேல்நிலைப் பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், தொழிற்கல்வி ஆசிரியர் ராஜா சுந்தர், பள்ளியின் முன்னாள் மாணவர் துரைமுருகன் (ராணுவம்), வசந்தகுமார்(VS பார்மா), தொழிலதிபர் அழகு ராஜன், குரு பிரகாஷ், ராஜா (சுவாதி பைனான்ஸ்), இன்பராஜ் )காவல்துறை), த ரவீந்திர குமார், உடற்கல்வி ஆசிரியர், அந்தோணி ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் செய்திருந்தார்.
22-ந்தேதி மாணவர் பிரிவு ஆக்கிப்போட்டிகள் நடைபெறுகின்றன.







