கோவில்பட்டி அருகே மான் வேட்டையாடியவர் கைது
கோவில்பட்டி அருகே குருமலையை சுற்றியுள்ள கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி சில முக்கிய புள்ளிகள்முயல்களையும், மான்களையும், மயில்ளையும் வேட்டையாடி சமைத்து விருந்து நடத்தி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் சென்றது. ‘

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, வனவர் பிர சன்னா, வனக்காப்பாளர் பொன் முனியசாமி, பேச் சிமுத்து ஆகியோர் தலை மையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டிருந்தனர்.

கடம்பூர் அடுத்துள்ள கொத்தாளி கிராமத்தில் இரவு ரியல் எஸ்டேட் அதிபர் முத்துப் பாண்டி தோட்டத்தில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது மானின் நான்கு கால்களை அங்கி ருந்து கைப்பற்றினர். இதையடுத்து விசாரணை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபர் பன்னீர்குளம் முத் துப்பாண்டியை கைது செய்த வனத்துறையினர் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடு வர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்,முத்துப்பாண்டிக்கு உடந் தையாக இருந்த திருநெல் வேலி மாவட்டம்
குறிச்சிகுளத்தை சேர்ந்த சுடலைமணி என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.







