ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. தேமுதிகவிற்கு சீட் வழங்கப்படாதது அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா கூறியதாவது: 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் தருகிறோம் என அதிமுக உறுதியளித்து இருந்தது. தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று எழுதி கொடுத்தது […]
சமூக வலைத்தளத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் புல்வெளியில் பேசியபடியே நடந்து செல்லும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த புல்வெளியில் நடந்தபடியே வரும் ஆதவ் அர்ஜூனா தமிழக அரசியல் கூட்டணி தொடர்பாக பேசுகிறார். அவருடன் வரும் புஸ்சி ஆனந்த் அதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல், ‘ம்.., ம்…’ என்றபடி வருகிறார். இந்த வீடியோவில் ஆதவ் அர்ஜூனா, ‘அண்ணாமலையாச்சும் 10 பேரை வச்சிக்கிட்டு, தேர்தலில் நின்னு 18, […]
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நடப்பாண்டில் ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும். பாமகவின் மகளிர் மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படும். 46 வருடங்களாக பாமகவை நான் தான் இயக்கி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. என்னை யாரும் இயக்க முடியாது. என் பொதுவாழ்வு மிக நீண்ட பயணம் கொண்டது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன். […]
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் 6 எம்.பி. பதவிகளில் சட்டசபை பலத்திற்கு ஏற்ப தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு பா.ஜனதா ஆதரவுடன் 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் போட்டியிடுவார்கள் என்றும், மீதமுள்ள ஒரு இடம் […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் இணைந்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் K. இராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் ஜூன் 4 முதல் 8 வரை நடக்க உள்ளது. இப்போட்டியில் 33 மாவட்ட அணிகள் கலந்து […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 01ம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் […]







