• June 3, 2025

கோவில்பட்டியில் 33 மாவட்ட அணிகள் பங்கேற்கும் ஆக்கிப்போட்டி; 3 இடங்களில் நடக்கிறது

 கோவில்பட்டியில் 33 மாவட்ட அணிகள் பங்கேற்கும் ஆக்கிப்போட்டி; 3 இடங்களில் நடக்கிறது

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் இணைந்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் K. இராமசாமி  பிறந்தநாள் கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் ஜூன் 4 முதல் 8 வரை நடக்க உள்ளது.

 இப்போட்டியில் 33 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன கே.ஆர் கலைக்கல்லூரி மைதானம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானம், கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானம் ஆகிய 3  இடங்களில்  போட்டிகள் நடைபெற உள்ளன

போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடத்தப்படும் மொத்தம் 60 போட்டிகள் நடைபெற உள்ளன சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து சென்னையில் நடைபெறும் முருகப்பா தங்கக் கோப்பைக்கான  போட்டியில் தமிழக அணிக்காக தேர்வு செய்து விளையாட அனுப்பப்படுவர்

மேலும்  அடுத்து வரும் அகில இந்திய ஆக்கி போட்டிகளிலும் தேசிய சீனியர் சாம்பியன் போட்டிகளிலும் விளையாட அனுப்பப்படுவார்கள். ஆக்கி வீரர்கள் தங்குவதற்கு இடம் உணவு மற்றும் மைதானங்கள் இலவசமாக வழங்கி போட்டியை தலைமை ஏற்று கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர்  கே.ஆர்.அருணாச்சலம் நடத்த உள்ளார்.

சிறப்பு விருந்தினர்களா ஆக்கி இந்தியாவின் பொருளாளர் சேகர் ஜே.மனோகரன், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் முனைவர்..செந்தில் ராஜ்குமார் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னாள் இந்திய ஆக்கி அணியின் தலைவர் முகமது ரியாஸ் மதுரை மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நடப்புச் சாம்பியன் ஆன தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி இந்த ஆண்டும் வெற்றி பெற இந்திய  ஆக்கி வீரர் மாரீஸ்வரன் தலைமையில் வீரர்கள் தேர்வு செய்து போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் .

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த சப் ஜூனியர் மாணவர்களுக்கான மாநில சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி நான்காவது இடம் பெற்றது இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முகம் பாரதி , முனைவர் சிவராஜ், முனைவர் ராம்குமார், பாரதி ராஜன், காளிமுத்து பாண்டியராஜன், சுரேந்திரன், ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *