பாஜகவின் ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கேரளாவின் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்திய கலை, இலக்கிய திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:- தமிழகத்தில் இருந்து வெளியே இருக்கிறேன். ஆனால், சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கிறது. திராவிடம் என்பது தமிழக கலாசாரத்தின் பெருமை. […]
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமரன் படத்தை பாராட்டினார். இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படகுழு அறிவித்துள்ளது. இந்நிலையில், அமரன் படத்தை பார்த்த […]
நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான ‘நிறங்கள் மூன்று’ படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இதில் நடிகர்கள் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அம்மு அபிராமி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கார்த்திக் […]
இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த திரைப்படம் லக்கி பாஸ்கர். தீபாவளி வெளியீடாக அக்டோபர்.31-ல் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாக குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக சென்னையில் படம் வெளியான முதல் நாளை விட தற்போது கூடுதலாக காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. […]
சிஎஸ்கே அணிக்காக மீண்டும் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார். அவரை சென்னை அணி நிர்வாகம் ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கிறது. அன்-கேப்ட் வீரராக தோனியை தக்க வைத்ததன் மூலமாக சிஎஸ்கே அணிக்கு மெகா ஏலத்திலும் சாதகம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரிக்கி பாண்டிங் பேசுகையில், இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ஏராளமான சுவாரஸ்யமான வீரர்கள் பங்கேற்கிறார்கள். சில இந்திய […]
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா., உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும். என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த […]
ஜன் சுராஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஒரு தேர்தலுக்கு ஆலோசனை அளிப்பதன் மூலம் ரூ.100 கோடிக்கும் மேலாக நிதிபெற்று வருவதாக கூறியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து, அதற்கேற்ப பிரச்சாரம் முதல் அனைத்தையும் வடிவமைத்து கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கும் உள்ளன. அமெரிக்க தேர்தலிலும் இவை பெரிய பங்கு வகிக்கும். அது இந்திய தேர்தல் களத்திலும் கடந்த சில ஆண்டுகளாக பார்க்க முடிகிறது. அதில், அரசியல் வியூக வகுப்பாளர்களில் இந்தியாவில் அதிகம் அறியப்பட்டவர் எனில் […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி […]
விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் மாவட்டம் முதல் கிளை வரை நிர்வாகிகளை நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளதக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு இறுதியில் விஜய்யின் சுற்றுப்பயணம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியை தொடங்கினார்.கட்சியின் முதல் மாநில மாநாட்டை கடந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தி […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் திங்கட்கிழமை முதல் (4.11.2024) தற்காலிகமாக கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் ஆணையாளர் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு மூலதன மானிய நிதி இயங்குதல் மற்றும் பராமரிப்பு 2024-25ம் ஆண்டு திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் பராமரிப்பு பணி […]







